இந்தத் திட்டம் பற்றி..

ஒரு ஸ்மார்ட் ஃபோன் (smart phone), ஒரு இன்டெர்நெட் (internet) இணைப்பு மூலம், நல்ல தரமான கல்வியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று சேர்ப்பதே இந்தத் திட்டம்.

பல்லாயிரக் கணக்கில் செலவு செய்ய முடியாத எவ்வளவோ மாணவர்கள், கொஞ்சம் ஊக்கம் கொடுத்தால், மிக நன்றாகப் படிக்கும் திறமை உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிராமப்புறத்தில், போதிய ஆசிரியர்கள் கிடைப்பதில்லை.

ஆன்லைன் (Online) வகுப்புகள் மூலம் இது சாத்தியம். வெறும் பதிவு செய்யப்பட்ட ரெகார்டிங் (recording) வகுப்பாக இல்லாமல், நேரலை லைவ் (live) வகுப்புகள், சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் நடத்துவதன் மூலம், இது சாத்தியம்.

Join Our Team

எதைச் சொல்லிக் கொடுக்கிறோம்?

8, 9, 10th

8, 9, 10ஆம் வகுப்புகளுக்கு உண்டான கணிதம், அறிவியல், ஆங்கிலம் (Maths, Science, English) சொல்லிக் கொடுக்கப்படும்.

11, 12th+

11, 12ஆம் வகுப்புகளுக்கு உண்டான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் (Maths, Physics, Chemistry, Biology) கற்றுத் தரப்படும்.

Syllabus

தமிழ் மீடியம், இங்க்லீஷ் மீடியம் இவற்றில் தமிழ்நாடு சமச்சீர் கல்வி மாணவர்கள் இதனால் பயனடைவார்கள்.

தேர்வுகள் எப்படி நடக்கும்?

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடத்துக்கும் MCQ என்று சொல்லக் கூடிய வினாக்கள் தரப்படும். இவற்றை மாணவர்கள் பார்த்து, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண்கள் தரப்படும்.

இது தவிர, வகுப்புக்கு இடையிலேயே ஆசிரியர் சில கேள்விகள் கேட்டு விடையை மாணவர்கள் அளிக்கும்படியும் நடக்கும்.

ரெகார்டிங் உண்டா?

வகுப்புகளின் முக்கிய பகுதிகள் பதிவு / ரெகார்டிங் (recording) மூலம் கிடைக்கும். எங்களது இணைய தளத்தில் இவற்றைக் காணலாம்.

மேலும் மாதிரி வினாக்கள், விளக்கப் படங்கள் (graphics), செய்முறை காணொளிக் காட்சிகள் (video) முதலியவையும் இருக்கும்.

கல்வியை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கற்கத் தூண்டும் குறும்படங்களும் (short animations) இருக்கும்.

வகுப்புகள் எப்படி இருக்கும்?

எல்லா வகுப்புகளும் ஆன்லைனில் (online), நேரடியாக ஆசிரியர் சொல்லித்தரும் வகையில் இருக்கும்.

zoom / Microsoft Meeting வழியாக வகுப்புகள் நடைபெறும். ஆசிரியரின் குரல், ஆசிரியர் எழுதும் பலகை, அனிமேஷன் (animation) முதலியவற்றை மாணவர்கள் பார்ப்பார்கள்.

மாணவர்கள் சந்தேகம் இருப்பின், கையை உயர்த்துவது போல் திரையில் (screen) காட்ட ஒரு பட்டன் (button) இருக்கும். அப்படிச் செய்த பிறகு, மாணவர் சந்தேகத்தை Chat வழியாக எழுதி அனுப்பலாம். அல்லது ஆசிரியர் அந்த மாணவரது மைக் (mic) மூலம் பேச அனுமதிக்கும் போது கேட்கலாம்.

சந்தேகங்களைத் தெளிவு செய்வதற்கென்றே ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். மேலும், இதற்கென்றே தனி வகுப்புகளும் நடக்கும்

Contribution / நன்கொடை

ALL the contribution / donation given by you for attending this course, goes to educational non-profit.  அனைத்து நன்கொடைகளும் கல்வி அறக்கட்டளைக்கு அளிக்கப்படுகின்றன.

01

வசதி உள்ள ஆதரவாளர்கள் (sponsors) நன்கொடை செலுத்தினால், அதனால் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வி அளிக்க முடியும். நீங்கள் நன்கொடை அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

02

மாணவர்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் பெறப்பட மாட்டாது.

03

80-G வரிவிலக்கு உங்களுக்கு வேண்டாம் என்றால், இந்த வங்கிக் கணக்குக்கு நன்கொடை செலுத்தவும்
.
Name of the Trust: OPENMENTOR TRUST
Regd. 433/2013
PAN: AAATO4113A
Banker Name: City Union Bank Ltd
Address of Bank: Mahalakshmi Street, T.Nagar, Chennai, India
Type of Account: Current Account
Account Number: 510909010001734
IFSC Code: CIUB0000001

04

80-G வரிவிலக்கு உங்களுக்கு வேண்டும் என்றால், இந்த வங்கிக் கணக்குக்கு நன்கொடை செலுத்தவும்.

IFEA EDUCATION CORPUS FUND
Name of the Bank: City Union Bank
Branch: Mahalakshmi Street, T.Nagar
IFSC code: CIUB0000001
A/c No.: 510909010170415

Enrollment / எப்படிச் சேர்வது?

You need to fill out the form to enroll yourself to this program. இந்த ஃபார்ம் நிரப்பவும்.

REGISTER HERE
Register

Fill the form and submit

We will contact you and provide the classroom details to join and attend.

Daily Classes

Follow the time table

Join our zoom classes. Each grade/subject will have a separate zoom link to attend.

Listen to recordings

We provide recordings as well

In case you are not able to attend the classes, we will provide you recorded content links.